விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரியோ ராஜ். இவர் திரையுலகிற்கு வந்தாலும் ஆரம்பத்தில் பெரிய வெற்றியை அடையவில்லை. இவருக்கான முதல் வெற்றியை கொடுத்த படம் ஜோ. அடுத்து கடந்த ஆண்டு வெளியான ஆண் பாவம் பொல்லாதது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது இவர் அடுத்து நடிக்கும் படம் மேடி.
இதையும் படிங்க: பிக்பாஸ் தாமரையிடம் நகையை வாங்கிய ஏமாற்றிய சீரியல் நடிகை கணவர்!
மேடி படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் பி.கே. இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ஹிப்ஹாப் தமிழா, லோகேஷ் கனராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மேடி முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடி நிறைந்த ஒரு படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சானியா ஐயப்பன் நடிக்கிறார். மேலும்
அஜு வர்கீஸ், ஆர்.ஜே. விஜய்,சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதிபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் தாய்க்கிழவி படத்தின் இணைத் தயாரிப்பாளரான கலை அரசு இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இதையும் படிங்க: 50-ஐ 500 ஆக்கிடாதீங்க.. உங்களுக்கென்ன ஜாலியா இருக்கீங்க – பிக்பாஸ் ஜூலி ஆவேசம்!

இந்த நிலையில் இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியனது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்படப்பிடிப்பினைதொடங்கி வைத்தார்.





