---Advertisement---

அஜித் மட்டும் வந்தால் விஜய்யை விட அதிக கூட்டம் வரும் – வைரலாகும் ராதாரவி கருத்து

Published on: March 25, 2026
vijay -radharavi -ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு அஜித்திற்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.அர் சிவாஜி , ரஜினி கமல் போன்று தற்போது விஜய் அஜீத் என்பதுதான் உண்மை. ஆனால் சினிமா வெற்றிகள், வியாபாரம் என்பது அஜீத்தை விட விஜய்க்கே அதிகம்.

விஜய்யின் சமீபத்திய தனிப்பட்ட சர்ச்சைகள் அவரது அரசியல் இமேஜில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்பு ராதாரவி பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

ராதாரவி பேசியதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு காலத்தில் எப்படி மாபெரும் கூட்டம் வந்ததோ, அதேபோல இப்போது விஜய்க்கும் கூட்டம் கூடுகிறது.
அஜித் ஒருவேளை பொது வாழ்க்கைக்கு வந்தால், விஜய்க்கு வரும் கூட்டத்தை விட அவருக்கு இன்னும் அதிக கூட்டம் வரும். அஜித்தின் படங்கள் ஓடவில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என்று பலரும் தொடர்ந்து குறைகூறிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி சாதாரண மக்கள் மனதில் அவர் மீது ஒரு நல்ல மரியாதையும், நன்மதிப்பும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

விஜய் அரசியல் கட்சி துவங்கியபோது, இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. ஆனால், சமீபகாலமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அந்த இமேஜில் சற்று சறுக்கலை ஏற்படுத்தியுள்ளன என்றே கூறலாம். குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் எதையும் யோசிக்காமல் சமீபத்தில் நடிகை திரிஷாவுடன் விஜய் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டது அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை உருவாக்கியது. பொதுவாழ்வில் உள்ள ஒரு தலைவரின் இத்தகைய செயல்பாடுகள், அவருக்கான செல்வாக்கில் ஒருவித பின்னடைவைக் கொண்டு வரும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.