---Advertisement---

கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு

Published on: March 26, 2026
venkat prabhu
---Advertisement---

விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் வரது படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் வெங்கட் பிரபு தற்போது வ்வெறொரு முயற்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.

கோட் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு பிரம்மாண்ட சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் மும்முரமாக நடந்தன. ஆனால், படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பு தரப்பு ஏற்கவில்லை . அமரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாததால், இந்த பட்ஜெட்டை ஏற்க சத்யஜோதி பிலிம்ஸ் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிவகார்த்திகேயனும் கதையில் பல மாற்றங்களைச் செய்யச் சொல்லி வெங்கட் பிரபுவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், தயாரிப்பு தரப்புக்கு ஏற்றவாறு குறைந்த பட்ஜெட்டில் வேறு ஒரு புதிய கதையை பண்ணலாம் என எஸ்கே கூற, வெங்கட் பிரபு அப்செட் ஆகிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க, இதுவரை செய்யப்பட்ட முன் தயாரிப்புச் செலவுகளை திரும்பத் தருமாறு தயாரிப்புத் தரப்பும் வெங்கட் பிரபுவிடம் தயாரிப்பு தரப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் விவகாரத்தால் நொந்துபோன வெங்கட் பிரபு, அடுத்து ஹிட் நாயகனான சிம்புவிடம் சென்றுள்ளார். பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சிம்புவிடம் அவர் ஐடியா கேட்டுள்ளார். ஆனால், அந்தக் கதை முதல் பாகத்தோடு முழுமையாக முடிந்துவிட்டது. இனி எப்படி இரண்டாம் பாகம் எடுக்க முடியும்? என லாஜிக்காகக் கேள்வி எழுப்பிய சிம்பு, அந்த ஐடியாவையும் நாசூக்காக நிராகரித்துவிட்டாராம்.

சிவா நம்ப வைத்து ஏமாற்ற, சிம்புவும் கையை விரிக்க, வேறு வழியில்லாமல் தனது கேரியரின் மிகப்பெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆம், தல அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்கும் முடிவில் இறங்கியுள்ளார். இதற்கான கதை விவாதப் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதில் உள்ள மிகப்பெரிய சிக்கலே அஜித்தின் சம்மதம்தான்.அஜித் தற்போது கார் ரேஸிங்கில் முழு வீச்சில் பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில், வெங்கட் பிரபுவின் ‘மங்காத்தா 2’ கதைக்கு அவர் செவி சாய்ப்பாரா? கால்ஷீட் கொடுப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.