மலையாளத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. தமிழில் ராம் இயக்கத்தில் மிர்சி சிவா நடிப்பில் வந்து வெற்றி பெற்ற பறந்து போ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் அபி சாம் சியாக்கை கரம் பிடித்த இவர், தற்போது தனது உழைப்பால் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி அந்த நெகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளாகத் தான் காதலித்து வந்த அபி டாம் சிரியாகை கிரேஸ் ஆண்டனி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது இவர்கள் இணைந்து புதிய BMW சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் எனத் கூறப்படுகிறது.
இது குறித்து கிரேஸ் ஆண்டனி தனது இன்ஸ்டா பக்கத்தில், புதிய காரின் சாவியைக் கணவருடன் இணைந்து கையில் வாங்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை கிரேஸ் ஆண்டனி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், கார் சாவியைக் கையில் பிடித்திருக்கும் இந்தத் தருணம் வெறும் ஒரு வாகனத்தை வாங்கியதற்கானது மட்டுமல்ல; இது பல ஆண்டுகால கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் தளராத உறுதியின் வெற்ற எனக் குறிப்பிட்டுள்ளார்.





