Connect with us

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபயர் மாதிரி இருந்த லெஜெண்ட் சரவணா!.. தனுஷ், வெற்றிமாறன் பாராட்டிய லீடர்!…

leader

latest news

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபயர் மாதிரி இருந்த லெஜெண்ட் சரவணா!.. தனுஷ், வெற்றிமாறன் பாராட்டிய லீடர்!…

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபயர் மாதிரி இருந்த லெஜெண்ட் சரவணா!.. தனுஷ், வெற்றிமாறன் பாராட்டிய லீடர்!…

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜென்ட் சரவணா நடித்து உருவான திரைப்படம் லீடர். இந்த படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாக்கியராஜ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்..

இந்த விழாவில் பேசிய துரை செந்தில்குமார் ‘கடந்த இரண்டு வருடங்களாக லெஜென்ட் சரவணன் சாருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குன்னூரில் சென்றபோது பாதையை மறந்து விட்டேன்.. அப்போது ‘லெஜென்ட் சரவணன் வருக வருக’ என்று ரசிகர்கள் வைத்திருந்த பேனரை பின்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு போனேன்..

தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால் ஜெயிப்பூரிலும் அதேபோல வந்த பாதையை மறந்து விட்டேன். அப்போதும் ‘லெஜெண்ட் சரவணன் வருக வருக’ என்று அவரின் ரசிகர்கள் பேனர் வைத்திருந்தனர். அதை பின்பற்றி ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போனேன்.. நெகிழ்ச்சியாக இருந்தது’ என பேசினார்..

அவருக்கு பின் பேசிய லெஜெண்ட் சரவணா ‘ லீடர் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடந்தது.. கிளைமாக்ஸ் சண்டை காட்சி எடுக்கும் போது எனது காலில் அடிபட்டது.. ஆனால் காயத்துடன் நடித்தேன். டைரக்டர் கேமரா ரோல் ஆக்சன் என சொன்னதும் அடுத்த நிமிஷம் ஃபயர்தான். எனக்கு எங்கிருந்து எனர்ஜி வந்தது என தெரியவில்லை.
இந்த படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் படம் பிரமாதமாக இருப்பதாக பாராட்டினர்.. லீடர் படம் ஜெயிலர், லியோ, விக்ரம் போல சூப்பர் ஹிட் படமாக அமையும்’ என பேசியிருக்கிறார்.

To Top