Connect with us

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

vijay

latest news

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும். அரசியலுக்கு வரவேண்டும் என்பது விஜய் ஏதோ 2 வருடங்களுக்கு முன்பு டுத்த முடிவு அல்ல. விஜய் மக்கள் இயக்கம் எப்போது தொடங்கியதோ அப்போதே அந்த ஆசை அவரிடம் இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் விஜயை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை துவங்கினார்..

அதன் மூலம் விஜயின் ரசிகர் மன்ற தலைவர்களை மக்கள் இயக்க நிர்வாகிகளாக மாற்றி அவர்களை அரசியல்படுத்தினார். இந்நிலையில் விஜயிடம் 30 வருடங்கள் பணிபுரிந்த பிடி செல்வகுமார் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியது பேசியபோது இதைப்பற்றி பேசியிருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.. விஜயை அரசியல் கொண்டுவர வேண்டும் என அவரின் அப்பா எஸ்.ஏ.சி விரும்பினார். விஜய்க்கும் அந்த ஆசை இருந்தது. விஜய் குருவி படத்தில் நடித்த போது கலைஞர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் குடும்பத்தை பார்த்துதான் நாமும் அரசியலுக்கு வரவேண்டும்.. அரசியலில் பெரிதாக சாதிக்க வேண்டும்.. அரசியல் பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்கிற எண்ணம் விஜய்க்கு வந்தது.. நாமும் வரவேண்டும் என விஜய் என்னிடம் சொன்னார்..

விஜய்க்காகத்தான் எஸ்.ஏ.சி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அது விஜயின் நல்லதுக்காகத்தான்.. ஆனால் அப்போது ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்ததால் விஜய்க்கு பயம் வந்துவிட்டது.. அப்பாவுடன் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

To Top