---Advertisement---

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Published on: April 3, 2026
---Advertisement---

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன் மற்றும் விஜய் டிவியின் சம அளவிலான சீரியல்கள் முதல் 10 இடத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

பத்தாவது இடத்தில் ஜீ தமிழ் சீரியலின் கார்த்திகை தீபம் 4.92 புள்ளிகளுடன் இருக்கிறது. விஜய் டிவியின் புதிய தொடரான அழகே அழகு ஒன்பதாவது இடத்தில் 5.06 புள்ளிகளுடன் இருக்கிறது. 6.26 புள்ளிகளுடன் சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் எட்டாவது இடம் பிடித்து இருக்கிறது. 

ஏழாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.36 புள்ளிகளுடன் இடம்பெற்று இருக்கிறது. ஆறாவது இடத்தில் விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் 7.14 புள்ளிகளுடன்  இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் 7.22 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது. 

நான்காவது இடத்தில் விஜய் டிவியின் நம்பர் ஒன் இடத்தினை தக்க வைத்து இருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். மூன்றாவது இடத்தில் அன்னம் சீரியலும் கயல் சீரியலும் ஒரே இடத்தினை பகிர்ந்து இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியலும் முதல் இடத்தில் மூன்று முடிச்சு சீரியலும் இடம் பிடித்துள்ளது.