---Advertisement---

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

Published on: April 4, 2026
vijay with seran
---Advertisement---

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது பரப்புரையில் , தொடர்ந்து ஆளும் திமுக அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிக்ரும் இயக்குனருமான சேரன் விஜயிடம் சில கேள்விகளை முன் வைத்துள்ளர். அதில்,

புதிய கட்சியைத் தொடங்கிய நீங்கள் மக்களிடம் வாக்குகளைக் கேட்கும் போது, ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்வைக்காமல், ‘அவர்களா, நாமா’ என தனிப்பட்ட மோதல் போல் அரசியலை முன்னெடுப்பதா என சேரன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஓட்டு கேட்க வரும்போது, சமூகத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன, அவற்றை எப்படித் தீர்க்கப் போகிறோம், அதற்கான மாற்றுச் செயல்திட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் ஒரு தலைவர் பேச வேண்டும்.”

அதை விடுத்து உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா, அல்லது நான் வேண்டுமா?’ என்று ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே நாட்டை ஆளுவதற்கான தகுதியாகி விடுமா? விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் அப்படி என்ன பிரச்சனை இருக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. அந்தப் பிரச்சனை என்னவென்று அவரது ரசிகர்களுக்கே கூட முழுமையாகத் தெரியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

திமுக மீது அப்படி என்ன கோபம் என்பதை விஜய் வெளிப்படையாக எங்களுக்கும் சொல்லட்டும்; அதில் உள்ள நியாயத்தைப் பார்த்துவிட்டு நாங்களும் அவருக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய், கட்சி துவங்கியதும் நடைபெற்ற தனது முதல் மாநில மாநாட்டிலிருந்து இன்றுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைவர்களை மட்டுமே மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.