கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள டோரதி திரைப்படம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிராமப்புற பின்னணியில் மனித உறவுகள், சாதி வேறுபாடு, ஆணாதிக்கம் மற்றும் பாலின அடையாளம் தொடர்பான விஷயங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் நடிப்பு படத்தின் முக்கிய பலமாக விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களில் நடிகர்களின் இயல்பான நடிப்பு கவனம் பெற்றுள்ளது. இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் படம் வெளி நாள் முதலே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கின. இதன் காரணமாகவே முதல் நாளில் சுமார் ரூ.90 லட்சம் வரை மட்டுமே நெட் வசூல் செய்ததாக Sacnilk மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சனிக்கிழமை ரூ.1.25 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.1.40 கோடியும் வசூலித்ததாக தகவல் வெளியானது. முதல் வார இறுதியில் மட்டும் ரூ.3.55 கோடி நெட் வசூல் கிடைத்தது. முதல் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை வசூல் சுமார் ரூ.85 லட்சமாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் அதே அளவுக்கு வசூல் கிடைத்ததாக தற்போதைய வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 5 நாட்களில் இப்படம் சுமார் ரூ.5.25 கோடி நெட் வசூலும், ரூ.6.15 கோடி கிராஸ் வசூலும் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் புதிய படங்கள் வர உள்ள நிலையில் இப்படத்தின் வசூல் மேலும் பாதிகலாம் என்றும் பலர் கூறுகின்றன.