Sigma Review: சிக்மா எப்படி இருக்கு ? – ரசிகர்களின் விமர்சனம் இதோ

Published on: October 2, 2026
sigma review
---Advertisement---

தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் இன்று அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இப்படத்தின் மீது வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

லைக்கா புரொடெக்சன் தயாரித்துள்ள இந்த படத்திற்உ தமன் இசையமைத்துள்ளார். இன்று வெளீயாகியுள்ள இப்படத்தை காண சஞ்சய், அவ்வரது தாய் சங்கீதா விஜய், மகள் திவ்யா உல்ளிட்ட முதல் குடும்பத்தினர் பலர் முதல் காட்சியை காண திரையரங்கு வந்தனர்.

இந்த நிலையில் சிக்மா படம் குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த கருத்து வைரலகியுள்ளது. தெய்வ நாயகம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில்

#Sigma 🔥 நிறைய பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த சிறப்பான என்டர்டெய்னர்!

Sundeep Kishan தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். J S J தனது அறிமுகத்திலேயே சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்! 👌🥁 பிளாக்பஸ்டர்!! 🔥

என்று பதிவிட்டுள்ளார். இவரது விமர்சனத்தை பார்க்கையில் படம் ரசிர்களை கவரும் வகையிலேயே இருப்பது தெரிகிறது.

ஸ்டார் டாக்கிஸ் என்ற பக்கத்தில் இதுவரை சரியான கதை எதுவும் பெரிதாக இல்லை. கதாபாத்திரங்களின் அறிமுகமும், அவர்களுக்கு இடையேயான மோதல்களும் உணர்வுபூர்வமாக அமையவில்லை. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான மற்றும் விறுவிறுப்பான விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசார் என்பவர் தனது பக்கத்தில், சிக்மா – முதல் பாதி நன்றாக உள்ளது 👍

படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும், படிப்படியாக வேகம் பிடித்து சிறப்பாக செல்கிறது. குறிப்பாக, இடைவேளை காட்சி நன்றாக அமைந்துள்ளது.

முதல் பாதியை முழுமையாக Sundeep Kishan தனது நடிப்பால் தாங்கியுள்ளார். அவர் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகர் ❤️

மேலும், தமன் இசையமைத்த இரண்டு பாடல்கள் முதல் பாதியின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளன. 🎶 என்று பதிவிட்டுள்ளார்.