ரஜினி பட டைட்டிலை கைப்பற்றப்போகும் கார்த்தி… எல்லாம் அந்த டைரக்டருக்காகத் தானாம்!
கார்த்தி நடிக்கப்போகும் புதிய படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார்.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் ‘சர்தார் 2’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
இதை அடுத்து கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல், ஹிட் 4’, இயக்குநர் மோகன் ராஜா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘தனி ஒருவன்’ புகழ் இயக்குநர் மோகன் ராஜா இயக்கப்போகும் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதத்தில் துவங்கவுள்ளனர்.

தற்போது, இந்த படத்துக்கு ‘சிவா’ என டைட்டில் வைக்கலாம் என கார்த்தியும், மோகன் ராஜாவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே பெயரில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த படம் 1989-ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.