latest news

Youth முதல் நாள் வசூலையாவது முறியடித்ததா Sigma?

'சிக்மா' திரைப்படம் நேற்று தான் திரையரங்குகளில் வெளியானது.

நம்ம தமிழ்நாட்டின் CM விஜய்யின் மகன் தான் ஜேசன் சஞ்சய். இவர் கதாநாயகன் ஆக ஆவார் என்று எதிர்பார்த்தால், டக்கென டைரக்டர் ஆகி விட்டார்.

இவர் இயக்கிய ஃபர்ஸ்ட் படம் தான் ‘சிக்மா’. இது நேற்று (அக்டோபர் 2 ஆம் தேதி) தான் உலகமெங்கும் தியேட்டர்களில் வெளி வந்தது.

இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக வலம் வந்துள்ளார். இது விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.

இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.2.70 கோடி என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு (2026) மார்ச் 19-ஆம் தேதி கென் கருணாஸ் இயக்கிய முதல் படமான ‘யூத்’ ரிலீஸ் ஆனது. கென்னே ஹீரோவாகவும் நடித்திருந்த இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.5.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Author