latest news

முதன் முறையாக!.. டோரதி டீமை நேரில் கூப்பிட்டு பாராட்டிய மம்முட்டி!.. புகைப்படங்கள் உள்ளே..

டோரதி படத்தை பராட்டிய மம்முட்டி..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டோரதி. இந்த படத்தில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சில காட்சிகளில் வந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

டோரரதி படத்தில் வரும் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கட்டி போட்டிருக்கிறது. 80களில் கேட்ட இளையராஜாவின் பாடல்களை திரும்ப கேட்டது போல ஒரு உணர்வை டோரதி திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபக்கம் ஒரு ஆண் பெண்ணாக மாறும் தருணத்தை, அவர் எப்படி திருநங்கையாக மாறுகிறார் என்கிற பரிணாமத்தை டோரதி திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எனவே, இந்த திரைப்படம் திருநங்கைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது..

dorathy

படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு கணிசமான தொகையை இந்த படம் வசூல் செய்திருக்கிறது. ஒரு பக்கம் வெற்றிமாறன், சசி, மணிரத்னம், லிங்குசாமி, மிஷ்கின் போன்ற பல பிரபலங்களும் திரைப்படத்தை பாராட்டியுள்ளனர். சமீபத்தில், சூர்யா இந்த படத்தை பாராட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் மம்முட்டி டோரதி படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் மூவரையும் நேரில் அழைத்து பாராட்டி பேசியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை கார்த்திக் சுப்பராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உங்களுடைய வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்.. அது எங்களை ஊக்கப்படுத்துகிறது.. நீங்கள் எப்போதுமே எங்களுடைய இன்ஸ்பிரேஷன்’ என பதிவிட்டிருக்கிறார். இதுவரை மம்முட்டி இப்படி யாரையும் அழைத்து பாராட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Author

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]