சின்னத்தில் ஏற்கனவே முத்திரை இருந்தது – உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு

Published On: December 27, 2019
---Advertisement---

956c2b90129208780277b987b74a3392

தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் வேளையில் சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சியில் தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டு இருந்ததாக மக்கள் புகாரளிக்க அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

அதேப்போல கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் ஊராட்சியின் 21வது வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டில் தவறான சின்னம் பொறிக்கப்பட்டு இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. 

இவைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் சுமூகமாகவே நடைபெற்றது. காலை 11 மணி வரை 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment