
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை இயக்குனர் ஹெச் வினோத் ஹைதராபாத்தில் முடித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்- போனி கபூர் – ஹெச் வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தின் மூலம் இணைந்துள்ளது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் 13 நாட்கள் நடந்த படப்பிடிப்பை தற்போது முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
இந்த படத்தில் அஜித்தோடு நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் யார் என்ற விவரம் எதையும் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



