ரசிகர்களை கவர்ந்த ‘நான் அவளை சந்தித்தபோது’ – திரைவிமர்சனம்

Published On: December 27, 2019
---Advertisement---

5c7491c231cd349270183e9decfc24ef-1

கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சம் காரணமாக வெற்றி பெற்று வரும் நிலையில் அந்த வகையில் வெளிவரவிருக்கும் இன்னொரு திரைப்படம் தான் ’நான் அவளை சந்தித்த போது’. சந்தோஷ் பிரதாப், சாந்தினி தமிழரசன் நடிப்பில் எல்.ஜி.ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை முதல் வெளியாக உள்ளது

உதவி இயக்குனராக பணிபுரிந்து, விரைவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் இருக்கும் சந்தோஷ், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த சாந்தினி முகவரியைத் தொலைத்துவிட்டு வழி தெரியாமல் இருப்பதை தற்செயலாக பார்த்து அவருக்கு உதவுகிறார். ஆனால் இதனை தவறாக புரிந்துகொண்ட சாந்தனியின் உறவினர்கள் இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

0dde627aec99dbfc9ca887d0f3d4d910

இந்த நிலையில் இருவரும் ஒரே ஒருநாள் மட்டும் ஒரே அறையில் நிலையில் திடீரென சாந்தியிடமிருந்து சந்தோஷ் தப்பித்து சென்றுவிடுகிறார். இருப்பினும் அவரது மனம் சாந்தினியை விட்டுவிட்டு வந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது. இதனை அடுத்து சாந்தினியை சந்திக்க மீண்டும் அவரை தேடி செல்கிறார். இருவரும் சந்தித்தார்களா? சந்தித்தாலும் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் மீதி கதை .

சந்தோஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகிய இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை உணர்ந்து உணர்வுபூர்வமாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக கிராமத்து பெண் வேடத்தில் சாந்தினி தமிழரசன் கலக்கி உள்ளார்.

0adbaddb26eda7a1e4b585d5fc2b0441-1

இயக்குனர் எல்.ஜி.ரவிசந்திரன் தன்னுடைய வாழ்க்கையில் உண்மையில் நடந்த கதை என்று கூறப்படுவதால் அந்த கதையை அவர் அனுபவித்து இயக்கியுள்ளார் என்பது ஓவ்வொரு காட்சியிலும் தெரியவருகிறது.

ஜிதேஷ் முருகவேலின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. ஆர்எஸ் செல்வாவின் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் நகர காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தை மிக கச்சிதமாக படத்தொகுப்பு செய்துள்ளா ராஜா முகமது அவர்களுக்கு பாராட்டுக்கள் 

ஒவ்வொரு காட்சியையும் உணர்வுபூர்வமாக ஏமோஷனல் கலந்து உருவாகியிருக்கும் எழுதி சுந்தர் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். இதுபோன்ற தரமான கதையம்சம் கொண்ட படங்கள் வெற்றி பெற்றால் தான் தமிழில் நல்ல தரமான திரைப்படங்கள் அதிகம் வெளிவரும் என்பதால் இந்த படத்தை வெற்றி பெற வைப்பது இரசிகர்களின் கடமையாக கருதப்படுகிறது
 

Leave a Comment