
பேட்ட திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வீடியோ ஏற்கனவேவெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படத்திற்கான பின்னணி இசை மற்றும் சென்சார் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், படம் தொடர்பான வியாபாரமும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 9ம் தேதி வெளியாகும் நிலையில், அமெரிக்காவில் 8ம் தேதியே தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்பட வுள்ளது. எனவே, ஒரு நாளைக்கு முன்பே அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் தர்பார் படத்தை கண்டுகளிக்கவுள்ளனர்.



