48 மணி நேரத்தில் படப்பிடிப்பு, 8 நாட்களில் ரிலீஸ்: ஒரு கின்னஸ் சாதனை முயற்சி!

Published On: December 27, 2019
---Advertisement---

df2dbb49ba82cdfaa43db887168c5a8c-2

ஏற்கனவே தமிழ் சினிமாவில் ’சுயம்வரம்’ என்ற திரைப்படம் 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் கின்னஸ் சாதனைக்காக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

48 மணிநேரங்களில் படப்பிடிப்பு, எட்டே நாட்களில் ரிலீஸ் என்ற இலக்கை வைத்து ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்த பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் பாபு கணேஷ் இயக்க உள்ளதாகவும், இந்த படம் 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 

யோகி பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பிரஸ்மீட்டில் விழாவில் கலந்து கொண்ட கலைபுலி எஸ் தாணு அவர்கள் படக்குழுவினர்களை வாழ்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த படம் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என அனைத்து திரை உலக கலைஞர்களும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment