ஒரு படத்தில் இருந்து விலகி இன்னொரு படத்தில் இணைந்த கௌதம் மேனன்

Published On: December 28, 2019
---Advertisement---

056919801ccf416ba768f3b57c064c2d

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது குயின் என்ற வெப்சீரிஸ் மற்றும் விக்ரம் நடித்து வரும் ’துருவநட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காப்பார் ஆகிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த பிஸியான பணியிலும் அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

நேற்று வெளியான தகவலின்படி விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்ஐஆர் என்ற படத்தில் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும் நேற்று முதல் அவர் எஃப்ஐஆர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை நடிகர் விஷ்ணுவிஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி அவர் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ‘வால்டர்’ என்ற படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக அந்த படத்தில் நட்டி நடராஜ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அவர் விஷ்ணு விஷாலின் படத்தில் இணைந்தும், சிபிராஜ் படத்திலிருந்து விலகவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment