கைகுலுக்க மறுத்த மேரி கோம் –வெடித்த சர்ச்சை !

Published On: December 29, 2019
---Advertisement---

c690bdc9af37b6986ade1ea36bd7eff1

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேரி கோம் சக வீராங்கனையிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் மேரி கோம்,  நிகாத் ஐரீன் இருவருக்கும் நடக்க இருந்தது. ஆனால் அந்த போட்டியை நடத்தாமலேயே 6 முறை தங்கப்பதக்கம் வென்ற அனுபவம் மிக்க மேரி கோமை ஒலிம்பிக்கு இந்தியாவின் சார்பாக அனுப்புவதாக முடிவு எடுக்கப்பட்டது. இது அவரது எதிர் வீராங்கனையான நிகாத் ஐரீனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஊடகங்களிடம் முறையிட்டு எனக்கான வாய்ப்பு வழங்க வேண்டும் எனப் போட்டியை நடத்த வைத்தார். ஆனால் போட்டியில் அனுபவம் வாய்ந்த மேரி கோம் வெற்றி பெற்றார். போட்டி முடிந்த பிறகு தன்னிடம் கைகுலுக்க வந்த நிகாத்தோடு கை குலுக்காமல் அவர் சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசிய மேரி கோம் ‘நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? அவரை ஒருவர் மதிக்க வேண்டும் அவரும் மற்றவரை மதிக்கவேண்டும். களத்தில் வந்துதான் நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டும். களத்துக்கு வெளியே அல்ல.’ எனத் தெரிவித்தார்.

Leave a Comment