கோலம் பேட்ட 6 பெண்கள் கைது – தமிழக அரசுக்குத் தலைவர்கள் கண்டனம் !

Published On: December 29, 2019
---Advertisement---

f04ce55159a5ffda71ce5f4b6e14af3d-1-2

சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவிகள் சிலர் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவ, அதையெடுத்து சம்மந்தப்பட்ட பெண்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இது சம்மந்தமான செய்தி சமூகவலைதளங்களில் பரவ தமிழக அரசின் இந்த அராஜக நடவடிக்கையைப் பலரும் கண்டித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment