
ஒரு போராட்டத்தை விதவிதமாக நடத்துவது எப்படி? என்பதை தமிழர்களிடமிருந்து தான் உலகமே கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேடிக்கையாக நெட்டிசன்கள் கூறுவதுண்டு. ஆனால் அது உண்மைதன் என்பது நேற்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே ஒரு கோலம் போட்டு அரசியல்வாதிகளையும் அரசையும் நடுங்க செய்ய தமிழர்களால் மட்டுமே முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று ஒரு சில மாணவிகள் போட்ட கோலம் இந்தியாவை மட்டுமன்றி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. வாசலில் போடும் ஒரே ஒரு கோலம் எப்படி ஒரு அரசையே அதிர செய்யும் என்று உலக மக்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய திரையுலக பிரபலமும், ஒளிப்பதிவாளருமான பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது டுவிட்டரில் ’மக்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க கோலம் என்ற ஒரு கருவியை கண்டுபிடித்தது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்த கோலங்கள் மக்கள் மனதில் எந்த அளவுக்கு இந்த விஷயம் பதிந்துள்ளது என்பதை காட்டுகிறது. மக்களின் எண்ணங்களுக்கு வண்ணங்கள் பூச முடியாது ஆனால் அதே நேரத்தில் இந்த வண்ணக்கோலங்கள் மக்களுடைய எதிர்ப்பை பிரதிபலித்து உலகையே வியக்க வைத்துள்ளது, இதெல்லாம் வேற லெவல் போராட்டம்’ என்று அவர் கூறியுள்ளார். பிசி ஸ்ரீராமின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது



