புத்தாண்டு தினத்தில் ‘தளபதி 64’ படத்தின் செகண்ட்லுக்?

Published On: December 30, 2019
---Advertisement---

9af0737a04cd366e738409f4025339d9-2-2

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இந்த பஸ்ட் லுக் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் இதனை வரவேற்க தளபதி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் ஃபர்ஸ்ட்லுக் வெளியான மறுநாள் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் நடித்த மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் வெளியான மறுநாளே செகண்ட் லுக் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

இதைப்போலவே 'தளபதி 64' படத்தின் பஸ்ட் லுக் வெளியான மறுநாள் செகண்ட்லுக் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment