Connect with us
vadivelu

Cinema News

விஜயகாந்த் மீது வடிவேலுக்கு அப்படி என்ன கோபம்? – வெளிவராத சில உண்மைகள்…

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

2011 சட்டமன்ற தேர்தலில் திடீரென திமுகவிற்கு ஆதராக பிரச்சாரம் செய்ய வந்த வடிவேலு அந்த பிரச்சாரத்தில் அவர் அதிமுக அரசையோ, ஜெயலலிதாவை ஒரு வார்த்தை விமர்சிக்கவில்லை. முழுக்க முழுக்க விஜயகாந்தையே அவர் கடுமையாக திட்டினார்.

vadivelu

விஜயகாந்தை அவன், இவன் என்றெல்லாம் ஒருமையில் விமர்சித்தார். எனவே, வடிவேலுவுக்கும், விஜயகாந்திற்கும் எப்படி என்னதான் பிரச்சனை என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் வடிவேல் நடித்த போது, அடுத்த நாட்டை ஆளப்போவது விஜயகாந்த் என்கிற ரேஞ்சிக்கு ஒரு வசனத்தை பேச சொன்னார்கள். ஆனால், வடிவேலு அதை பேச மறுத்தார். ஆனாலும் விஜயகாந்த் இதையெல்லாம் பெரிதா எடுத்துக்கொள்ளும் நபர் இல்லை. ஆனால், அவரின் சாகக்கள் அப்படி இல்லை.

vadivel

ஒருமுறை விஜயகாந்தின் உறவினர் ஒருவர் இறந்துபோய்விட விஜயகாந்தின் நண்பர்கள், கட்சி காரர்கள், தொண்டர்கள் என சிலர் தங்களின் காரை நிறுத்தியிருந்தனர். வடிவேலுவின் அலுவலகத்தை தாண்டித்தான் விஜயகாந்த் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அப்போது தனது அலுவகத்திற்கு செல்ல வடிவேலு வந்தார். வடிவேலுக்கு இந்த விபரம் தெரியாது. எனவே, அங்கிருந்த கார்களை எடுக்க சொல்லி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது விஜயகாந்தை அவர் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.

vadivelu

வடிவேலு

இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் ஆதரவாளர்கள் சிலர் அன்று மாலை ஆட்டோவில் சென்று வடிவேலு வீட்டின் மீது கல்லெறிந்தனர். அப்போது, வீட்டின் ஜன்னல் ஓரத்தில் படித்துகொண்டிருந்த அவரின் மகன் கலைவாணியின் தலையில் கல் பட்டு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இந்த தகவல் படப்பிடிப்பில் இருந்த வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் அவர் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் தலையில் தையல் போடுவதற்காக தலை மொட்டை அடிக்கப்பட்டது. இதை அவமானமாக கருதிய அவரின் மகள் கலைவாணி பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறிவிட்டார். அப்போது அவரின் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் எனகூறப்படுகிறது. அந்த வருடமே வீணாய் போய்விட்டது.

vadivel5

விஜயகாந்த சொல்லி அவரின் ஆதரவாளர்கள் வடிவேலு வீட்டில் கல்லெறியவில்லை. அது அவர்களாக செய்ததுதான். விஜயாகந்திற்கு தெரிந்திருந்தால் நிச்சயம் அதை தடுத்திருப்பார். ஆனால், இதை புரிந்து கொள்ளும் பக்குவம் வடிவேலுவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

இந்த சம்பவம் வடிவேல் மனதில் தீரா பகையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத்தான், 2011 சட்டமன்ற தேர்தலில் அவரே விரும்பி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்தார்.

vadivelu2-2

முழுக்க முழுக்க விஜயகாந்தை திட்டவே அந்த பிரச்சாரத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றது.

இது நடந்த 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை..

எல்லாவற்றையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு…

google news
Continue Reading

More in Cinema News

To Top