வடிவேலுவா?.. தெறித்து ஓடிய நடிகைகள்.. வெறுத்துப்போன பிரபல இயக்குனர்….

Published on: September 30, 2021
vadivelu
---Advertisement---

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

vadivel

லைக்கா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளது.

vadivelu
வடிவேலு

முதல் படமாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. ஆனால், முக்கிய வேடத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், வடிவேலு படத்தில் நான் நடிக்க முடியாது என அனைவரும் கை விரித்து விட்டனராம். எனவே, வேறு நடிகையை தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

Leave a Comment