Connect with us
kushboo

latest news

சமந்தா – நாக சைதன்யா பிரிவிற்கு காரணம்.. கடுப்பாகி டுவிட் செய்த குஷ்பூ!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தபோதே நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில் திடீரென பிரிந்துவிட்டார்.

அதன்பின் சமந்தா கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் நேற்று தங்கள் பிரிவை அறிவித்தார்கள்.

sai pallavi

samantha divorced

இந்த பிரிவுச் செய்தி சினிமா வட்டாரத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பிரிவதாக முடிவெடுத்தபின் இருவருமே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த பதிவில், நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நாங்கள் பிரிவதற்கு முடிவு செய்துள்ளோம்.

இதையும் படிங்க: இதுதான் காரணமா?.. சமந்தா – நாக சைத்தன்யா விவாகரத்தின் பின்னணி…

பத்துவருடங்களுக்கு மேலாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கஷ்டமான நேரத்தில் நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்கள்.

samantha

இவர்களது பிரிவிற்கு பலரும் பலவித கதைகளை கூறிவந்தனர். இந்நிலையில் இவர்கள் பிரிவு குறித்து நடிகை குஷ்பூ ஒரு டுவிட் செய்துள்ளார். அதில், அவர்கள் பிரிவிற்கான காரணம் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. உங்கள் யூகத்தினால் என்ன நடந்திருக்கும் என பேசுவதை நிறுத்துங்கள்.

அவர்களின் இந்த கடினமான நிலையை புரிந்துகொண்டு அவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

kushboo

kushboo twitter

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top