Connect with us

latest news

9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் ஜோடி.. இப்போ ஆளே மாறிட்டாங்க!

தமிழ் சினிமாவில் 1989 ஆம் ஆண்டு ஜாடிக்கேத்த மூடி என்ற படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதன்பின் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின் 2004ல் செல்லமே படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார்.

நடித்த முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின்னர் சண்டைக்கோழி, திமிரு என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்தார். இதன்பின் வரிசையாக பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

vishal-sunaina

vishal-sunaina

தற்போது விஷால் அரிமா நண்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். நாயகிகளாக மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக அடுத்தமாதம் வெளியாக உள்ளது. இதுதவிர வீரம் வாகை சூடும், துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷால்.

ஜொலிக்கும் கருப்பு கவர்ச்சியை கண்டு ஜொள்ளு வழியும் ரசிகர்கள்!

விஷால் நடிப்பில் கடந்த 2013ல் வெளியான படம் சமர். இப்படத்தை திரு என்பவர் இயக்கியிருந்தார். இவர் நடிகை விஜயலட்சுமியின் அக்கா கணவராவார். சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா, சுனைனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது.

vishal-sunaina

vishal-sunaina

இந்நிலையில், தற்போது விஷால் புதியப்படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

தற்போது, படப்பிடிப்பு தளத்தில் சுனைனாவுடன் விஷால் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top