விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்… ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Published On: October 22, 2021
vikram
---Advertisement---

கார்த்திக் நடித்த கைதி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு பெரிய அதிர்ஷ்டமாக தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் தான் விக்ரம்.

இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக வருகிறார். இவர் தவிர நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.

vikram
vikram

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை சிவானி மற்றும் ‘மைனா’ நந்தினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மற்றொரு சின்னத்திரை நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான மகேஷ்வரியும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார்.

இதில் கமல் மற்றும் பகத் பாசிலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பதுபற்றி ஏதும் தெரியவில்லை. மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றிபெற்றதால் இப்படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்து வருகிறார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததோடு சரி அதன்பின் எந்த ஒரு அப்டேட்டும் இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்தநாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் வரும் நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸி வீடியோ வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்

Leave a Comment