கெட்ட வார்த்தை பேசனுமா? படமே வேண்டாம் தெறித்து ஓடிய சமந்தா…..

Published on: October 22, 2021
samantha
---Advertisement---

வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றி மாறன் இயக்கும் படங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ஏதாவது ஒரு விருதை பெற்று விடுகிறது. இறுதியாக வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு பலரது பாராட்டையும் தட்டி சென்றது.

வெற்றி மாறன் படங்களில் நடிக்க முன்னணி நடிகர்களும், நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகை ஒருவர் தன்னை தேடி வந்த வெற்றி மாறன் பட வாய்ப்பை வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

vada chennai
vada chennai

அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றி மாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் வடசென்னை. இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சமந்தா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் இந்த படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும் என்பதால், இந்த படத்தை வேண்டாம் என கூறி சமந்தா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் அதே கதாபாத்திரத்தில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த படம் மூலம் நல்ல பெயர் தான் கிடைத்தது. நடிப்பு என்று வந்த பின்னர் இதெல்லாம் பார்த்தால் வேலைக்காகுமா பாஸ் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment