அண்ணாத்த படம் இயக்க தல அஜித்தே காரணம்! – இயக்குனர் சிவா நெகிழ்ச்சி…

Published On: November 11, 2021
annaatthe
---Advertisement---

நடிகர் ரஜினிக்கு கடைசியாக வெளியான பேட்ட, தர்பார் என 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. பேட்ட படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அப்படத்திற்கு போட்டியாக வெளியான விஸ்வாசம் படம் பேட்டை படத்தின் வசூலை பாதித்தது. தர்பார் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

எனவே, எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என சிவாவுடன் கை கோர்த்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் தீவிர ரஜினி ரசிகர்களையே கவரவில்லை என ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. போட்டிக்கு பெரிதாக படங்கள் இல்லாத நிலையில் அண்ணாத்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.

annaatthe review

இந்நிலையில், அண்ணாத்த படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் சிவா ‘நான் இயக்கிய முதல் படமான சிறுத்தை ரஜினி சார் பார்த்து ரசித்தார். அப்போது நான் இணைந்து ஒரு படம் செய்வோம் என 2011ம் ஆண்டு கூறினார். அதன்பின் விஸ்வாசம் படம் பார்த்து என்னை நேரில் அழைத்து பாராட்டினார். நாம் உடனடியாக ஒரு படம் செய்வோம் எனக்கூறித்தான் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

siva

எனவே, அண்ணாத்த படம் கிடைத்ததற்கு காரணமே விஸ்வாசம்தான். விஸ்வாசம் படத்தை எனக்கு கொடுத்தது அஜித். எனவே, ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததற்கு அஜித்தே காரணம்.விஸ்வாசம் படத்தை என்னால் மறக்கவே முடியாது.’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை தல அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறனர்.

Leave a Comment