பிக்பாஸ் வீட்டுக்கு எப்போது செல்கிறார் கமல்? – பரபர அப்டேட்…

Published on: December 3, 2021
kamalhassan
---Advertisement---

விஜய் தொலைக்காட்சியில்தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் தமிழ் தற்போது 5வது சீசனை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்காதவர்கள் கூட அவர் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். எனவே, ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் இருந்ததால் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த வாரம் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரும் இந்நிகழ்ச்சியை நன்றாகவே நடத்துவதாக பலரும் கூறினர். ஒரு சிலரோ கமல் அளவுக்கு ரம்யா கிருஷ்ணன் இல்லை எனவும் கூறினார். தற்போது கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார். எனவே, அவர் எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த செல்வார் என்கிற எதிர்பார்ப்பு அந்நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், இந்த வாரமே கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கமல் தற்போது சிகிச்சை பெறும் மருத்துவமனை சென்னை போரூரில் இருக்கிறது. பிக்பாஸ் செட் பூந்தமல்லியில் இருக்கிறது. அங்கிருந்து மிகவும் பக்கம் என்பதால் மருத்துவமனையிலிருந்து நேராக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment