வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே இப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.

சமீபத்தில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடலை படக்குழு வெளியிட்டது. அந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
இந்நிலையில், வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது குளிரில் நடுங்கிய படி அஜித் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.





