அப்படி படமே வந்ததில்லை!- ஆண்டவரையே கவலைபட வச்சிட்டீங்களேப்பா..

Published on: December 14, 2021
kamal
---Advertisement---

அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.இப்படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இசை மற்றும் டிரெய்லரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘படத்தின் கதையுடன் பாடலை கலப்பது எளிதானதல்ல. தமிழில் இசை சார்ந்த நல்ல படங்கள் இதுவரை இல்லை என்பதுதான் உண்மை’ என பேசியுள்ளார்.

இதற்கு எப்படி எதிர்வினைகள் வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment