latest news
ரஜினியை பார்த்தாவது திருந்துங்க விஜய்.! ஆசை யாரை விட்டது.?!
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக கூறிக் கொண்டு வருகிறார். சொன்னது போல் வந்தார் ஆனால் கடைசியில் தான் உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனால் அவரின் அரசியல் வருகையை நம்பியிருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். முதலில் அவர் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருந்த நேரம் அவள் திரைப்படங்களுக்கு வரவேற்பு மிகவும் பலமாக இருந்தது. அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை அறிவித்த பின்னர் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு போதியளவு வரவேற்பு இல்லை என்பதே உண்மை.
இதையும் படியுங்களேன்…விஜய் சேதுபதியை அடுத்து நாய் சேகரை கரம்பிடிக்கும் பிக் பாஸ் ஷிவானி.!
தற்போது அதே பாணியை நடிகர் விஜய்யும் பின்பற்றி வருவதாக பேசப்பட்டு வருகிறது. அதாவது தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படி அடுத்தடுத்து ஆராய்ச்சியின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் தங்களது தளபதி கண்டிப்பாக அரசியலுக்குள் நுழைந்து விடுவார் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். விஜய் ஆவது ரஜினியைப் போல் அல்லாமல் தனது ரசிகர்களை ஏமாற்றாமல் அரசியல் நிலவரம் அல்லது ரஜினியை போல அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டு கடைசி நேரத்தில் தான் வரவில்லை என்று அறிவிப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.