Connect with us

Bigg Boss

அட போங்கடா நான் வெளியே போறேன்.! ஆட்டத்தை ஆரம்பித்த வத்திக்குச்சி வனிதா.!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பித்து செம் சூப்பராக ஆரம்பத்தை கொடுத்துள்ளது. முழுக்க முழுக்க ஹாட்ஸ்டார் OTT தளத்தில் மட்டுமே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

அதற்கேற்றாற் போல பிக் பாஸ் குழு கடந்த சீசன்களில் களைகட்டிய போட்டியாளர்களை தேர்வு செய்து களமிறங்கியுள்ளனர். வனிதா, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, பாலா, தாடி பாலாஜி, அபினவ், தாமரை செல்வி என போர்க்களத்திற்கு தேர்வு செய்வது போல தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இதையும் படியுங்களேன் – தப்பித்து கொண்ட விஜய்.! நீதிபதியிடம் கூறிய ‘அந்த’ ஒரு வார்த்தை.!

அதற்கேற்றாற் போல முதல் நாளிலே நாமினேஷன், உண்மையை பொது வெளியில் சொல்வது என பிக் பாஸ் நிர்வாகவும் கொளுத்திப்போட ஆரம்பித்துவிட்டது.

இதில் இன்று வெளியான 2வது ப்ரோமோவில் வாத்திக்குச்சி வனிதா தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். உண்மையை சொல்லும் போட்டியில் பங்கேற்ற அவர், இது உண்மையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் நீங்கள் யார், நான் இந்த போட்டியை விட்டு வெளியே போகிறேன் என அந்த இடத்தை அதகளப்படுத்தி விட்டு சென்று விட்டார்.

இப்படி அனல் பறக்கும் போட்டியை நீங்க காண வேண்டுமென்றால் அது ஹாட்ஸ்டார் OTT தளத்தில் மட்டுமே பார்க்க முடியும். அதனால், HOTSTAR OTT தளத்திற்கு பணம் கட்டி சந்தாதாரர் ஆகிக்கொள்ள வேண்டும். பயங்கரமான யோசனையை செயல்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Bigg Boss

To Top