Cinema News
ஷூட்டிங்கை நிறுத்திய ரஜினி.! நள்ளிரவில் பயங்கர ஆர்ப்பாட்டம்.!
சுந்தர்.சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்வெற்றியடைந்த திரைபடடம் அருணாச்சலம். இதில் தான் முதன் முதலாக சுந்தர் சி – ரஜினி கம்போ ஒன்று சேர்ந்தது. கிரேசி மோகன் இப்பட எழுத்து வேலைகளை மேற்கொண்டிருந்தார்.
இப்படத்தில் ஒரு காட்சி வரும் அதுதான் முக்கியமான காட்சியும் கூட. அதாவது, ரஜினி , தான் யார் என தெரியாமல் ஊருக்கு கிளம்புவார். அப்போது ஒரு குரங்கு வந்து அவரது கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தை எடுத்து விட்டு ஓடிவிடும். அதனை பின்தொடர்ந்து செல்கையில் தான் தான் யார் என்கிற உண்மை ரஜினிக்கு தெரியவரும்.
இந்த மாதிரியான சம்பவம் ஒன்று அருணாச்சலம் ஷூட்டிங்கின் போது நடந்துள்ளது. அதாவது, ரஜினியின் கழுத்தில் இருந்த ருத்ராட்சம் ஷூட்டிங்கின் போது காணாமல் போனதாம். உடனே பதறிய ரஜினி அங்கு ஷூட்டிங்கை உடனே நிறுத்திவிட்டாராம். இதனை பார்த்த படக்குழு உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நள்ளிரவு வரை அந்த ருத்ராட்சத்தை தேடி உள்ளதாம்.
பின்னர் அதனை கண்டுபிடித்து ரஜினியிடம் ஒப்படைத்து விட்டனர். அவரது ருத்ராட்சம் கைக்கு வந்த பிறகு தான் பின்னர் தான் ரஜினிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.