இத நானே எதிர்பார்க்கல.! வெளிப்படையாக பேசிவிட்டார் சிம்பு.! வெளியான சூப்பர் வீடியோ.!

Published on: February 24, 2022
---Advertisement---

விஜய் டிவியில் வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்றது. அதாவது முழுக்க முழுக்க OTTயில் மட்டும் இது ஒளிபரபானது. இதில் ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தேர்ந்தெடுத்து இதில் பங்கேற்க வைத்தனர்.  இதற்கும் முதலில் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால், பல தவிர்க்க முடியாத காரணத்தால், தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிக்கை மூலம் தெரிவித்துவிட்டு வெளியேறினார். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் போல யார் சிறப்பாக தொகுத்து வழங்குவார் என நிறுவனம் தேடி வந்தது.

இதையும் படியுங்களேன் – சன் பிக்சர்ஸ்க்கு நக்கல் ஜாஸ்திதான்.! வலிமைக்கு எதிராக டிவிட்டரில் செய்த வேலை.!

இந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என்ற பேச்சு சில தினங்களுக்கு முன்பே வெளியானது. தற்போது அதனை 100 சதவீத உண்மை ஆக்கியுள்ளது ஹாட்ஸ்டார். அதற்கான முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

அதில் வெள்ளை கலர் கோர்ட் சூட் என கெத்தாக ஸ்டைலாக சிம்பு வருகிறார். எதிர்பார்க்கலல , இத நானே எதிர்பார்க்கல என வெளிப்படையாக பேசி செல்கிறார். இந்த வாரம் ஒளிபரப்பாகும் பிக் பாஸை சிம்புதான் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் முழுவதையும் இவர் தான் தொகுத்து வழங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment