விஜயை கடுமையாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்.! அஜித் மனசு யாருக்கு வரும்.?!

Published on: February 28, 2022
---Advertisement---

திரையுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. தனக்கு நல்லது செய்தால் அவர்கள் நல்லவர்கள். தனக்கு வேண்டாததை செய்தால் அவர்கள் கெட்டவர்கள் இப்படித்தான் பலர் நடந்து வருகின்றனர். அவர்கள் வேண்டுமென்று ஒரு நபருக்கு கெடுதல் நினைக்கப்போவதில்லை. அவர்கள் அவர்கள் பாதையில் செல்கின்றனர் அது வேறு ஒருவருக்கு தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அப்படி,தான் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் கே.ராஜன் அஜித் பற்றி கூறியுள்ளார்.  ராஜன் எப்போதும் தனக்கு தோன்றிய கருத்துக்களை தைரியமாக பேசிவிடுவார். அது ரஜினி, கமல், விஜய், அஜித் என பாகுபாடெல்லாம் கிடையாது.

ajith-boni kapoor

அப்படி அவர் கூறுகையில், அஜித் மனசு யாருக்கும் வராது. அவர் தயாரிப்பாளருக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என பார்த்து பார்த்து தனது நகர்வுகளை செய்து வருகிறார். வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டது. தயாரிப்பாளரின் பணமும் கொரோனா காலத்தில் 3 வருடங்கள் முடங்கிவிட்டது. அதனால், மீண்டும் அவருக்கு ஒரு படம் விரைவில் எடுத்து கொடுத்துவிடுவோம் என உடனே நடித்து கொடுக்கிறார்.

இதையும் படியுங்களேன் – தரமான தல வெறியரை உள்ள இறக்கிட்டாங்களே.! இனி அடிச்சி பட்டைய கிளப்ப போகுது படம்.!

அதுதான் சார் அஜித். மற்ற நடிகர்கள் போல, இப்போ 100 கோடி அடுத்த படம் அதனை விட அதிக சம்பளம் இங்கு தருகிறார்களா அல்லது தெலுங்கு பக்கம் தருகிறார்களா என பாப்போம் என இங்குள்ள தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை என பெயரை குறிப்பிடாமல் கோபமாக கூறினார்.

உடனே நெட்டிசன்கள், இது விஜய்க்கு எதிரான கருத்து. விஜய் தான் மாஸ்டர் , பீஸ்ட் படம் முடிந்து தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கிறார். அங்கு இதுவரை விஜய் வாங்காத சம்பளம் அவருக்கு கொடுக்க படுகிறது என கூறிவருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment