Connect with us

Cinema News

அஜித்துக்கு ஒரு நியாயம்.! விஜய்க்கு ஒரு நியாயமா.?! இதெல்லாம் ரெம்ப அநியாயம் பாஸ்.!

அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக அவரது 61வது திரைப்படத்தையும் வினோத் இயக்க உள்ளார். அந்த பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே 62வது பட இயக்குனர் தயாரிப்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி விட்டது.

அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுவரை இல்லாத அளவு அஜித்திற்கு இப்படத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே லைகா நிறுவனம் முதன் முதலாக விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை தயாரிக்க வந்த போது தமிழகத்தில் வராத எதிர்ப்பு இல்லை. லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இலங்கையை சேர்ந்தவர் என்பது தான முக்கிய காரணம்.

ஆனால், அதன் பிறகு பல படங்கள் அவர்கள் தயாரித்துவிட்டார்கள். விஜய்க்கு சக போட்டியாளராக இரும் அஜித் படத்தை லைகா தயாரிக்கும் போது எந்த எதிர்ப்பும் வரவில்லையே ஏன் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதுவும் இப்போது இலங்கையில் கடும் பஞ்சம் நிலவி வருகிறது. அதற்கு உதவாமல், தற்போது அஜித்திற்கு 100 கோடி சம்பளம் கொடுத்து படம் தயாரிக்கிறாரா என பலர் ஆதங்கம் தான் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ நான் காட்டுவேன்.! அடம்பிடிக்கும் ரஷ்மிகா.!

விஜய் அவ்வப்போது தோன்றும் பொதுமேடைகளில் சில அரசியல் கருத்துக்களை பேசுவார். மேலும், படங்களிலும் அரசியல் குறித்து காட்சிகள் இருக்கும். அதனால், தான் அவர் படங்கள் வரும் போது ஏதேனும் பிரச்சனை வருகிறது என்கிறது திரையுலகம். அஜித் இந்த வம்புக்கெல்லாம் வருவதேயில்லை அதனால் தான் அவர் படங்களுக்கு எந்த பிரச்னையும் வருவதில்லை என்கிறது திரையுலகம்,

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top