இனி நான் அந்த பக்கமே போக மாட்டேன்.! விஜய் எடுத்த அதிரடி முடிவு.!

Published on: March 27, 2022
---Advertisement---

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு,  இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

vijay

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் படங்களுக்கு தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெறும். அப்போது  சில அரசியல் கருத்துகளையும், குட்டி கதைகளையும் கூறி வருவார்.

ஆனால், இந்தமுறை அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லை. கொரோனா காலகட்டத்தில் கூட மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறிய அரங்கில் நடைபெற்றது. ஆனால், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் நீங்கி உள்ள நிலையிலும் இதுவரை நடைபெறவில்லை.

இதற்க்கு காரணமாக, ‘அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அடுத்ததாக விஜய் பிரபல அரசியல் ஆலோசகரை சந்தித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த காரணங்களால்தான் இசை வீட்டு விழா தயாரிப்பு நிறுவனத்தால் நடைபெற வில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – ஒருநாளைக்கு இவ்வளவு பணமா.?! வாய்பிளக்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சம்பள விவரம்.!

இந்நிலையில் இந்த காரணங்களால், இனிமேல் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க கூடாது. என்று தளபதி விஜய் தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதனால் அடுத்தடுத்து வெவ்வேறு பட நிறுவனங்களில் படத்தில் நடித்துக் கொடுக்க இருக்கிறாராம் தளபதி விஜய் என்றும் கூறப்படுகிறது. வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்க்கலாம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment