Connect with us

Cinema News

திட்டம் போட்டு ரிலீஸ் செய்யும் கூட்டம்.! அஜித், விஜய் இடையே நடக்கும் பனிப்போர் இதுதான்.?!

அஜித் விஜய் தற்போதைக்கு தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் இவர்கள் தான். வியாபாரத்தில் அஜித்தை எப்போதோ விஜய் முந்தி சென்றுவிட்டார். தற்போது தான் விஜய் இடத்தை அஜித் எட்டி பிடித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் ரசிகர்கள் பலத்தில் இருவரும் சமம் தான்.

இவர்கள் படம் வருகிறது என்றால் தியேட்டர்காரர்களுக்கு கொண்டாட்டம் தான். எப்படியும் கல்லா கட்டிவிடலாம். படம் நன்றாக இல்லை என்றாலும் பெருமபாலான ரசிகர்கள் இவர்களை திரையில் பார்த்தால் போதும் என வந்துவிடுவார்கள். அதனால் முதலுக்கு மோசம் வராது.

அஜிதை பற்றி ஒரு செய்தி வந்தால், விஜய் பற்றிய செய்தி வந்துவிடுகிறது. அல்லது விஜய் பற்றிய செய்தி வந்தால் அஜித் பற்றிய செய்தி வந்துவிடுகிறது. இது எதேச்சையாக நடக்கிறதா அல்லது திட்டம் போட்டு இதெற்கென இரு தரப்பிலும் ஆள் செட் செய்து நடத்துகிறார்களா என தெரியவில்லை.

தற்போது இது வெளிப்படையாக நடந்து வருகிறது. அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் சமயத்தில் தான் விஜய் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார் அந்த புகைப்படம் வெளியானது. தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தை பிறந்ததை பார்க்க சென்றார் அது வைரலானது.

இதையும் படியுங்களேன் – மங்காத்தா-2வை மறந்திடுங்க.! வலிமையை கழுவி ஊற்றிய வெங்கட் பிரபு.!

அதே போல நேற்று விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்பட ட்ரைலர் அறிவிப்பு வெளியானது. அது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வந்த சமயம், அஜித் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த போட்டோக்கள் ட்ரெண்ட் ஆனது. அது வைரலானது. இதெல்லாம் எதேச்சையாக நடக்கிறதா அல்லது திட்டம் போட்டு யாரேனும் நடத்துகின்றனரா என தெரியவில்லை.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top