ஆண்டவர் ரசிகர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் லோகேஷ்.! காரணம் இதுதானா.?!

Published on: April 21, 2022
---Advertisement---

மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது. இதனை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கைதி, மாஸ்டர் பட வேலைகளை பார்த்து பிடித்துபோய் கமல்ஹாசன் இந்த வாய்ப்பை லோகேஷ் கனகராஜிற்கு வழங்கியுள்ளார்.

இதுதான் கமல் ரசிகர்களுக்கு தற்போது பயமாக இருக்கிறதாம். முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து படமாக்கிய மாநகரம் திரைப்படம் லோகேஷ் படமாக இருந்தது. அதன் பிறகு வெளியான கைதி புகைப்படமும் அப்படித்தான் முழுக்க முழுக்க லோகேஷ் படமாக இருந்தது.

ஆனால், அதன் பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படம் ஹீரோ விஜய் வில்லன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாகவும் மக்கள் மனதில் பதியும் வண்ணமும் இருந்தது உண்மையே. விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் தான் லோகேஷ் கனகராஜ் படம் என்ற நினைவை ரசிகர்களுக்கு கொடுத்தனர்.

இதையும் படியுங்களேன் – உண்மைகளை இப்டி போட்டு உடைச்சிடீங்களே.! கமல் படக்குழு மீது கோபத்தில் ரசிகர்கள்.!

அதேபோல, தற்போது விக்ரம் படத்திலும் நடந்து விடுமோ என்ற அச்சம் தற்போது கமல் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி இருக்கிறார், பகத் பாசில் இருக்கிறார். இருவரும் தான் வில்லன். ஆதலால் இந்த கதையும் மாஸ்டர் பட பாணியில் இருந்து விடுமோ என்று தங்களது ஆஸ்தான நாயகன் கமலுக்கு முக்கியத்துவம் இது குறைந்து விடுமோ எனவும் தற்போது பயந்து உள்ளனராம்.

 

அடுத்ததாக மே மாதம் இறுதியில் துபாயில் விக்ரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விக்ரம் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஜூன் மூன்றாம் தேதி இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment