100 வயது தாத்தா வர்றாரு... எப்படி சண்டை போடுவாரு.?.. ஷங்கர் சொன்ன நச் பதில்

by sankaran v |   ( Updated:2024-07-01 02:43:02  )
Indian 2 kamal
X

Indian 2 kamal

இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தாவுக்கு 100 ஐ கடந்துள்ளார். இந்தியன் படத்தின் போது அவருக்கு 80 வயதாகிறது என காட்டுவார்கள். இப்போது 26 வயதைக் கடந்துள்ளது. அதனால் அவருக்கு 106 வயது.

இந்த நிலையில் அவரால் எப்படி வர்மக்கலை உத்தியைக் கையாண்டு சண்டை போட முடியும் என்று நேயர்கள் கேள்வி எழுப்பினர். இது எல்லாருக்கும் தோன்றும் சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க... கலைவாணரை சுடுவதற்கு பல நாளாக ஒத்திகை பார்த்த எம்.ஆர்.ராதா! அதிர்ச்சி பின்னணி

இந்தியன் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமலும், இயக்குனர் ஷங்கரும் இந்தக் கேள்விக்கு மிகச்சரியான பதிலைச் சொல்லியிருந்தனர்.

இப்போதும் சீனாவில் 120 வயது வரை உள்ள மார்ஷல் ஆர்ட்ஸ் குரு இருக்காராம். அப்படி இருக்கும்போது இங்கு வர்மக்கலையில் 100 வயதைத் தாண்டிய ஒருத்தர் இருக்கக்கூடாதா என்ன? என்று பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன்.

இயக்குனர் ஷங்கர் அந்தப் பேட்டியில் முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கமும் இருந்தால் வயது ஒரு தடையல்ல. அவர்களுக்கு அது ஒரு நம்பர் தான்.

அதே நேரம் குருநாதராக இருப்பவர்களுக்கு உடல் எல்லா விதங்களிலும் ஒத்துழைக்கும். சீனா போன்ற நாடுகளில் தற்காப்பு கலைஞர்கள் இன்னும் 100 வயதைக் கடந்தவர்கள் குருவாக இருந்து வருகின்றனர். லூசி ஜியான் என்ற மார்ஷல் ஆர்ட 120 எல்லாரையும் ஓட விடுறார்.

இதையும் படிங்க... ரஜினி, கமல் இணைந்து நடிக்கப் போறாங்களா? அந்த தயாரிப்புன்னா சாத்தியமாம்..!

ஒரு வேளை தான் சாப்பிடுவாரு. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா, தியானம், மைன்ட்டை கன்ட்ரோல் பண்ணினா 120 வயதிலும் மார்ஷல் ஆர்ட்ஸ் பண்ணலாம். அதே மாதிரி தான் சேனாபதி என்ற இந்தியன் தாத்தாவும் என்று தெளிவாகப் பதில் சொன்னார்.
கமலும் 90 வயதுடைய ஜப்பானிய தற்காப்பு கலைஞரைச் சொல்லி அவரை எனக்குத் தெரியும் என்றார்.

Next Story