அண்ணனை போலவே தம்பியும்!. முரளி குடும்பத்தைத் துரத்தும் சோகம்!.. டேனியல் பாலாஜி இறப்பிற்கு காரணம் இதுதான்!..
தமிழ்சினிமாவில் வில்லன் நடிகர்கள் என்றாலே தனி அந்தஸ்து தான். ஆரம்ப காலத்தில் நம்பியார், அசோகன், பிஎஸ்.வீரப்பா மிரட்டினார்கள். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிரட்டலாக வந்தவர் ரகுவரன். இவர் வில்லனாக பாட்ஷாவில் வராவிட்டால் படம் அந்த அளவு எடுபட்டு இருக்காது.
அதற்குப் பிறகு என்றால் அது டேனியல் பாலாஜி தான். இவர் உடல்மொழியே அசர வைக்கும் அளவுக்கு கொடூரமான வில்லத்தனத்தைக் காட்டும். வேட்டையாடு விளையாடு படத்தைப் பார்த்தால் தெரியும். அவரது கண்களில் அவ்வளவு உக்கிரம் தெரியும். இவர் சமீபத்தில் மறைந்தது திரை உலகையே உலுக்கி விட்டது.
இதையும் படிங்க... இவரா வில்லன்?.. வேண்டவே வேண்டாம்! டேனியல் பாலாஜியை ஒதுக்கிய மாஸ் ஹீரோ
இவரது அண்ணனுமான முரளியைப் போலவே இவரும் இளம்வயதிலேயே இறந்தது நெஞ்சைப் பிழியும் சோகத்தை வரவழைத்து விட்டது. அதுவும் இன்னும் திருமணமே ஆகவில்லை. எப்படி இறந்து போனார் என்பது குறித்து பலரும் பல்வேறு வகையான காரணங்களைச் சொல்லி வருகின்றனர். பொதுவாக மாரடைப்பு என்பது எல்லோரும் சொல்வது தான். டேனியல் பாலாஜி இறப்புக்கு முன் நடந்தது இது தான் என்கிறார் பிரபல யூடியூபரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.
நீலாங்கரையில் சம்பாதித்து கட்டிய சொந்த வீட்டில் வழக்கம்போல நண்பர்குளுடன் உரையாடிக் கொண்டு இருந்தார். அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். ஒரு நாளைக்கு 30 சிகரெட் குடிப்பாராம். கடைசி வரை சிகரெட்டைக் குடித்து முடிப்பாராம்.
அது இதயத்துல நிகோடின் விஷமாகப் பரவியிருந்தது. அப்போது மாரடைப்பு வந்ததும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். போகிற வழியிலேயே இறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவரது அண்ணன் முரளியும் அப்படித்தான். புகைப்பழக்கம் உடையவர். தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது. உயிரைக் குடிக்கும். புகை உயிரைக் கொல்லும் என்றெல்லாம் எத்தனையோ விழிப்புணர்வுகள் வரத்தான் செய்கிறது. சிகரெட் பெட்டியிலே கூட இந்த விழிப்புணர்வு வாசகத்தைத் தான் போடுகிறார்கள்.
இதையும் படிங்க... டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்
அப்படி இருந்தும் அதை விடாமல் செயின் ஸ்மோக்கராக இருந்து குடித்து உயிரை விடுவது என்பது சாவை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். இனி வரும் தலைமுறையாவது இதுபற்றி விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms