விஜய் பட தயாரிப்பாளரை பகைத்துக்கொண்ட விஜய் சேதுபதி… வட போச்சே மொமெண்ட்!..

by Arun Prasad |   ( Updated:2023-02-02 07:13:36  )
Thalapathy67
X

Thalapathy67

தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் “அரண்மனை 4” திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

Vijay Sethupathi

Vijay Sethupathi

அது மட்டுமல்லாது ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் “ஃபர்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த வெப் சீரீஸ் வருகிற 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இது போக “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் இடையே மிகப்பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு தகவலை கூறியுள்ளார்.

Lalit Kumar

Lalit Kumar

அதாவது லலித்குமார், இனி தயாரிக்கப்போகும் இரண்டு திரைப்படங்களுக்காக விஜய் சேதுபதியின் கால்ஷீட் நாட்களை வாங்கி வைத்திருந்தாராம். இதற்காக ஒரு குறிப்பிட்டத் தொகையை அட்வான்ஸாக பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் என்ன காரணத்தினாலோ ஒரு நாள் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நிலவியதாம்.

அதன் பின் ஒரு நாள் லலித்குமார் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு நேராகச் சென்று “நான் உங்களை வைத்து இனி படம் தயாரிக்கப்போவதாக இல்லை” என்று முகத்திற்கு நேராக கூறிவிட்டு கொடுத்த அட்வான்ஸை திரும்ப பெற்றுக்கொண்டு வந்துவிட்டாராம். இவ்வாறு வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் கூறியுள்ளார்.

Vijay Sethupathi

Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடித்த “96” திரைப்படத்தை வெளியிடும்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டதாம் அந்த சிக்கலை லலித் குமார்தான் தீர்த்து வைத்தாராம். அந்த உதவிக்கு கைமாறாக “மாஸ்டர்”, “துக்ளக் தர்பார்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்” போன்ற லலித் தயாரித்த திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்தாராம்.

இதுபோக மேலும் இரண்டு படங்களுக்கான கால்ஷீட்டும் வாங்கி வைத்திருந்தாராம். அந்த படங்களுக்காக கொடுத்த அட்வான்ஸைத்தான் தற்போது திரும்ப வாங்கியுள்ளார் லலித். ஆனால் இருவருக்குள்ளும் எந்த காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லையாம்.

Thalapathy 67

Thalapathy 67

செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனரான லலித் குமார் தற்போது விஜய்யின் “தளபதி 67” திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்… ஆனால் சண்டைப்போட்டுக்கிட்டது எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்… காலக்கொடுமை!!

Next Story