“விக்னேஷ் சிவனுக்கும் த்ரிஷாவுக்கும் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு”… அந்த படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமாம்!!

Published on: January 2, 2023
AK 62
---Advertisement---

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார் என்ற தகவலை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

Trisha
Trisha

மேலும் இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனை அணுகியதாம். ஆனால் விக்னேஷ் சிவனோ, “எங்களுக்கும் த்ரிஷாவுக்கும் ஏற்கனவே ஆகாது. ஆதலால் த்ரிஷாவை இதில் நடிக்க வைக்க வேண்டாம்” என கூறிவிட்டாராம். அப்படி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை இப்போது பார்க்கலாம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

KVRK
KVRK

எனினும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் முதலில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷாவைத்தான் ஒப்பந்தம் செய்தாராம் விக்னேஷ் சிவன். ஆனால் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று அத்திரைப்படத்தில் டைட்டில் போட முடிவெடுத்தாராம் விக்னேஷ் சிவன்.

இதையும் படிங்க: அசாத்திய வித்தையை காட்டி பா.ரஞ்சித்தை அசரவைத்த மாளவிகா மோகனன்… இவர் கிட்ட இப்படி ஒரு டேலண்ட்டா??

Trisha
Trisha

இதனால் த்ரிஷாவுக்கு ஒரு உறுத்தல் ஏற்பட்டதாம். ஆதலால் அத்திரைப்படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டாராம். அதன் பிறகுதான் சமந்தாவை ஒப்பந்தம் செய்தாராம் விக்னேஷ் சிவன். இந்த சம்பவத்தை மனதில் வைத்துத்தான் “AK 62” திரைப்படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய விக்னேஷ் சிவன் மறுத்துவிட்டாராம். இத்தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.