கைதிக்கு முன்னாடி நடக்குற கதைதான் லியோ! – ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..

by Rajkumar |   ( Updated:2023-03-18 05:44:03  )
கைதிக்கு முன்னாடி நடக்குற கதைதான் லியோ! – ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..
X

leo kaithi

தமிழில் தற்சமயம் சினிமாவையே ஒரு புரட்டு புரட்டி போடும் விஷயமாக லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் இருக்கின்றன. ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் மாதிரியான திரைப்படங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த மாதிரியான ஒரு பாணியில் தமிழில் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

கமல் நடித்து போன வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் இதற்கு ஒரு ஆரம்பமாக இருந்தது. விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தை இணைந்திருந்தார் லோகேஷ். தற்சமயம் அதனை தொடர்ந்து கைதி 2 மற்றும் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் ஆகியவை வரவிருக்கின்றன.

kaithi

இந்த நிலையில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படமும் கூட லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் வருமா?, விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் விஜய் நடிக்கிறாரா? என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்த விஷயத்தை மறைத்து வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

லியோ படத்தின் கதை:

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான செய்யார் பாலு இதுக்குறித்து கூறும்போது கைதி படத்திற்கு முன்னால் கார்த்திக்கு ஒரு கதை உண்டு. இந்த கதை நடக்கும் அதே காலக்கட்டத்தில் காஷ்மீரில் லியோவின் கதை நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Leo

Leo

எனவே கைதி 2 வில் கூட விஜய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என கூறப்படுகிறது. இந்த படத்திலும் போதை பொருள் கடத்தல் காட்சிகள் இருக்கும் பட்சத்தில் இது லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் வரும் திரைப்படமாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story