லியோவை மிஞ்சிய தக் லைஃப்!.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடியா?.. 1000 கோடி வசூல் பண்ணுமா?!..

கமல், மணிரத்னம் கூட்டணியில் நாயகன் படத்திற்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் தக் லைஃப். நான் காயல்பட்டணம்காரன் என்ற முறுக்கேற்றிய வசனத்துடன் சண்டைக்காட்சியில் பொளந்து கட்டிய கமலை படத்தின் டைட்டில் டீசரில் பார்த்துப் பிரமித்தோம். இது நாயகன் படத்தின் சில வசனங்களை வைத்துப் பார்க்கும் போது தொடர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க... திரிஷா வாழ்க்கையில் விளையாடிய பிரபல நடிகை?… இதனால் தான் அந்த பிரேக் அப் நடந்துச்சா?

இது கமலின் 234வது படம். திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு உள்பட பலரும் நடிப்பதாக தெரிகிறது. படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ்சும், மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இவர்களது படங்கள் எல்லாமே பெரும்பாலும் ஹிட் தான்.

அதனால் இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. தற்போது படத்தில் 40 சதவீதம் வரை படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாம். படத்திலிருந்து நிறைய நடிகர்கள் விலகுவதும் மீண்டும் இணைவதுமாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதெல்லாம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில் கமலின் கெட்டப் இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கோணிப்பையை தலையில் மூடி முக்காடிட்டபடி இவர் பேசும் கம்பீரமான வசனங்களும், தொடரும் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை மிரள வைக்கின்றன. இப்போது இந்தப் படத்தைப் பற்றிய சூடான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதையும் படிங்க... நடிகையுடன் ராமராஜனுக்கு தொடர்பு? சந்தேகப்பட்டு சிங்கப்பூர் வரை ஃபாலோ பண்ணி போன நளினி…

பிரபல படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணனிடம் தக்லைஃப் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போம்.

ஓவர்சீஸ் ரைட்ஸ் மட்டுமே 60 கோடி வரை போயிருக்காம். முதன் முறையாக ஒரு தமிழ்ப்படம் இப்படி போயிருப்பது ஆச்சரியம். லியோ படம் 55 கோடி வரை போனதாம். இது நிச்சயம் 1000 கோடி வரை வசூல் வேட்டையை நடத்தும். கமல், சிம்பு, மணிரத்னம் கூட்டணியில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் வர உள்ளது.

 

Related Articles

Next Story