அஜித் எல்லாம் இப்போதான்… அப்பவே சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட்டு மாஸ் காட்டிய தளபதி!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டம் முதலே நடிகர்களுக்கு நடுவே போட்டி என்பது இருந்து வருகிறது. இந்த போட்டியே இவர்கள் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு முக்கியமாக உதவுகிறது. இந்த போட்டியை விபரீதமாக எடுத்துக்கொண்டு ரசிகர்கள் அதற்காக பல விஷயங்களை செய்வதை பார்க்க முடியும்.
இதன் பிறகு கமல் ரஜினி இருவருக்குமிடையே போட்டி இருந்தது. அதற்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இரண்டு நடிகர்களுக்குமிடையே உள்ள போட்டிதான் இப்போதைய இளம் தலைமுறையினர் வரை நீடித்து வருகிறது. கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள் கூட கடும் போட்டியுடன் தான் வெளியாகின.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியான அதே சமயத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் வெளியானது. அப்போது அஜித் நேரடியாக ரஜினிகாந்துடன் போட்டி போடுகிறார் என பலரும் பேசி வந்தனர். ஆனால் அதற்கு முன்பே ரஜினியுடன் போட்டி போட்டு படம் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
போட்டி போட்ட விஜய்:
2005 ஆம் ஆண்டு இப்போது இருப்பது போல விஜய் மிகவும் பிரபலமாக இருக்கவில்லை. ஆனால் அப்போது ரஜினி கொஞ்சம் பிரபலமாக இருந்தார். 14 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான திரைப்படம் சந்திரமுகி. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக சந்திரமுகி இருந்தது.
அதற்கு போட்டியாக விஜய் நடித்த சச்சின் திரைப்படம் அதே தேதியில் வெளியானது. சச்சின் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். மேலும் காதல் படமாக சச்சின் உருவாகியிருந்தது. அந்த சமயத்தில் ஒரு வருடம் ஓடி ஹிட் கொடுத்தது சந்திரமுகி.

ஆனால் சச்சின் படமும் சந்திரமுகிக்கு டஃப் கொடுத்து 200 நாட்கள் திரையில் ஓடியது. சந்திரமுகியை விட சச்சின் படம் குறைந்த பட்ஜெட் என்பதால் அதற்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. இந்த அளவிற்கு அப்போதே ரஜினியிடம் ஒரு காதல் படத்தை வைத்து போட்டி போட்டுள்ளார் தளபதி.
இதையும் படிங்க: என்னைய வச்சி படம் எடுத்தா அவ்வளவுதான்- வந்த தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிய ஜெய்சங்கர்… ஏன் தெரியுமா?