Cinema History
எங்க இருந்துப்பா வந்தீங்க… திருவிளையாடல் பட பாடலுக்குபின் இவ்வளவு அர்த்தங்களா!…
நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியான படம்தான் திருவிளையாடல். இத்திரைப்படத்தினை ஏ.பி. நாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சாவித்ரி, டி.எஸ்.பாலையா, நாகேஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்பட பாடல்களுக்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் கே.வி.மகாதேவன் இதற்கு இசையமைத்தும் உள்ளார்.
நடிகர் திலகத்தில் வாழ்நாளில் அவருக்கு பெரும் புகழை தேடிதந்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே இலக்கியநயத்துடனும் கதைக்கு ஏற்ப பொருந்த கூடியதாகவும் அமைந்தன. ஒவ்வொரு வரிகளையும் பக்தியுடனும் அதே சமயம் உணர்வுபூர்வமாகவும் கவிஞர் படைத்துள்ளார். அதற்கு இசையமைப்பாளர் உயிரோட்டமும் கொடுத்துள்ளார்.இத்திரைப்படம் பரஞ்ஜோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புத்தகத்தின் ஒரு சில படலங்களின் தொகுப்பாகும். இத்திரைப்படத்தில் வரும் பாட்டும் நானே பாவமும் நானே இப்புத்தகத்தின் விறகு வெட்டகூடிய படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
இதையும் வாசிங்க: எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…
இப்படத்தில் வரும் பாட்டும் நானே பாடலும் நானே பாவமும் நானே பாடம் மிக பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது. மதுரையை ஆண்ட வரதரபாண்டியனிடம் வடக்கே இருந்து வந்த ஹேமநாத பாகவதர் பாடல்களை பாடி பரிசினை பெறுகிறார். பின் அவரிடமே என்னை விட நன்கு பாடுபவர் இவ்வுலகில் இல்லை என கூற மன்னனோ அதனை பாடகரான பாணபத்திரனிடம் சென்று சொல்கிறார்.
பாணபத்திரனோ உங்கள் ஆசையும் இறைவன் அருளும் இருந்தால் நான் ஹேமநாத பாகவதரை வெல்வேன் என கூறிவிட்டு வெளியே வரும்போது ஹேமநாதரிடம் பயிலும் மாணவர்களின் பாடலை கேட்கிறார். வியப்பில் ஆழ்ந்த இவர் சொக்கநாதரிடம் சென்று விஷயத்தை கூற சொக்கநாதரோ நான் பார்த்து கொள்கிறேன் என கூறுகிறார். பின் விறகு விற்கும் வியாபாரியாக வந்து ஹேமநாத பாகவதரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பாடுகிறார். அதை கேட்ட ஹேமநாத பாகவதர் நீயா பாடினாய் என கேட்க சிவாஜியோ ஆமாம் நாம் பானபத்திரரிடம் பயில வந்தேன். ஆனால் அவரோ என்னை நிராகரித்துவிட்டார் என கூற அதை கேட்டு ஹேமநாத பாகவதர் ஓடிவிடிகிறார். இதுதான் கதை சுருக்கம்.
இதையும் வாசிங்க: தோல்விகளை சந்தித்த சிவாஜியை தூக்கிவிட்ட ஹிந்தி ரீமேக் படம்!… எந்த படம்னு தெரியுமா?…
இப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இப்படத்தின் ஒவ்வொரு கதைகளையும் மிக அழகாக நகர்த்தியுள்ளார். மேலும் கதையின் ஒவ்வொரு அணுவையும் ஆராய்ந்து கண்ணாதாசனும் பாடல்களை எழுதியுள்ளார். இப்படம் மதுரையில் நடைபெற்ற சம்பவத்தை தழுவிய கதை. மதிரையை ஆண்ட பாண்டியர்களை மையப்படுத்த சிவாஜி கையில் வைத்துள்ள வீணையில் மீன் படத்தினை வரைந்திருந்தார். அனைத்து கதாபாத்திரங்களும் செந்தமிழில் பேச சிவாஜியோ மதுரை தமிழில் பேசியிருப்பார். இதற்கு காரணம் இக்கதை மதுரையை தழுவியது என்பதால்தானாம் மேலும் அவர் மதுரையை ஆழும் சொக்கநாதர் என்பதாலும் கூட. மேலும் வந்திருப்பது சிவ பெருமான் என்பதை காட்ட அவரை 5 பேராக காட்டியிருப்பார் இயக்குனர்.
இவர் கதைக்கு பெருமை சேர்த்தால் நடிகர் திலகம் படத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். பாடும் நானே பாவமும் நானே பாடலில் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..என்ற வரி வரும் பொழுது உலகம் முழுவதும் இயங்காத மாதிரியான காட்சி வரும். அப்போது சிவாஜி கிண்டலாக கண்ணசைப்பார். அவ்வாறு அவர் கண்ணசைத்த உடன் உலகம் இயங்கும். இவ்வாறு கதையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் ஆராய்ந்து திறம்பட கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.
இதையும் வாசிங்க: கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..